தொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI

0
1096

அறிமுகம் :-

MSME DI : Micro Small and medium Enterprises Development institute, 1954 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.

தொழில் முனைவுச் சிந்தனை உள்ள பலரும் செயல்பாட்டில் இறங்காமல் நினைவுகளுடனேயே நின்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வமுள்ளவர்களுக்கு தயக்கம் போக்கி சரியான தொழில் ஆலோசனைகளைத் தந்து அதற்குரிய தொழிற் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது MSME-DI.

பெரிய நிறுவனங்களுக்கு அடித்தளங்கள் வலுவாக உள்ளதால் அவைகளின் வளர்ச்சி விரிவாகவும் , வேகமாகவும் அமைந்து விடுகிறது. ஆனால் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் நிலை எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதற்கு மிகவும் போராட வேண்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு குழந்தையைக் காப்பாற்றும் தாயினைப் போல உதவுவதில் MSME-DI -ன் பங்கு குறிப்பிடத்தக்கது.

MSME -DI யின் சேவைகள் :-

1.தொழில்நுட்ப பயிற்சிகளையும் , ஆலோசனைகளையும் ( Technical /Technology
Training & consultancy/ counselling) வழங்குகிறது.

2. திறன் மேம்பாடு பயிற்சிகளை (Skill Development Programme) வழங்குகிறது. தொழில் சார்ந்த கருத்தரங்குகளை (Seminar / Workshop)நடத்துகிறது .

3. தொழில் சார்ந்த சந்திப்புகளையும் , கண்காட்சிகளையும் (Trade Fair / Exhibitions / B2B Meet ) நடத்துகிறது .

4.குறு, சிறு தொழில் நிறுவனங்கள் MSME-DI யில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து MSME / SSI Registration certificate-ஐ பெறலாம்

5. வாய்ப்புகளை தேடித் தருவதிலும் , அரசு தரும் உதவிகளான அரசு நிதியுதவி, மானியங்கள், கடன் வாய்ப்புகள், சலுகைகள் , போன்றவைகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உதவி முதல் தொடரும் தொழில் வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான ஒவ்வொரு அம்சத்திலும் MSME-DI யை தொழில் முனைவோருக்கு நல்ல தோழனைப் போல உதவி செய்கிறது.

6.குழும நிறுவனங்களின் ( MSE Clusters) உருவாக்கத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

7. உற்பத்தி (Productivity) திறன் மேம்பாடு, பொருட்களை சந்தைப்படுத்துதல் (Marketing), ஆய்வுக் கூடங்கள் (Laboratories) அமைத்தல், சிறந்த கட்டமைப்புகளை(Infrastructure) உருவாக்குதல் , புதிய படைப்பு ,பரிசோதனை கூடங்கள் அமைத்தல் , மூலப்பொருட்கள் கிட்டங்கி (Raw material Warehouse) அமைத்தல் , பன் நோக்கு அணுகுமுறை, கூட்டுச் செயல்பாடு ,பொது விநியோகம் , எளிதாக கூட்டு முயற்சியில் பொருட்களை சந்தைபடுத்துதல் , வர்த்தக அமைப்புகளுக்கென பொது குறியீடுகள் ,போட்டிகளை சமாளிக்கும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research And Development) போன்றவைகளை செயல்படுத்துவதற்கான உதவிகளையும் , ஆலோசனைகளையும் வழங்குகிறது.

மேலும் இவற்றை செயல்படுத்துவதற்கான மானியங்கள் மற்றும் நிதியுதவியை பெற்று தருகிறது.

8. தொழில் முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை தேர்வுசெய்வதற்கும் (Selection of Products) , மற்றும் தொழில் அமைப்பதற்கான இடத்தினை (Location) தேர்வுச் செய்வதற்கும் வழிகாட்டுகிறது .

9. உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையே சந்திப்புகளை (Buyer And Seller Meet) நடத்துகிறது . இதன் மூலம் சிறு மற்றும் குறு நிறுவன உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் வாடிக்கையாளரை கண்டறிவதற்கு MSME-DI உதவுகிறது . சிறு ,பெரு மற்றும் குறு நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்புகளை MSME-DI வழங்குகிறது.

10. பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு (Marketing Assistance) உதவுகிறது .

11.உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்வதற்கும் , தங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் (Raw Material) மற்றும் இயந்திரங்களை (Machinery) இறக்குமதி (Import) செய்வதற்கும் வழிகாட்டுகிறது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here