டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

0
1011

இந்தநிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog | (National Institution for Transforming India)) மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர்களுக்கு ‘லக்கி கிரஹக் யோஜனா திட்டம்’ (Lucky Grahak Yojana) மற்றும் வணிகர்களுக்கு ‘டிஜி தன் வியாபார் யோஜனா திட்டம்’ (Digi Dhan Vyapari Yojans) என்ற இருவகையான பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் கூறுகையில், லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் டிசம்பர் 25 முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை நுகர்வோர்களில் தினமும் 15,000 பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு ரூ.1 இலட்சம், ரூ. 10,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது

இதே போல் வியாபாரிகளுக்கான ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ திட்டத்தின் கீழ் வாரம்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு ரூ.50,000, ரூ.5,000 மற்றும் ரூ.2,500 மதிப்பிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். நுகர்வோர்களுக்காக முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும், வணிகர்களுக்காக ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், மற்றும் ரூ.5 லட்சம் அறிவிக்கப்படும்.

இந்த இரு திட்டத்தின் கீழ் ரூ.3,000-க்குக் கீழ் மற்றும் ரூ.50-க்கு மேலான மதிப்புடைய பணபரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI, USSD, Aadhar Enabled Payment System (AEPS) மற்றும் RuPay cards போன்ற அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இந்தப் பரிசு போட்டிக்குத் தகுதியானவை என அவர் கூறியுள்ளார். The National Payment Corporation of India (NPCI) இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here