செல்போன்கள் மூலம் கொரோனா பரவுமா?

0
1046

‘செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?’ -இது நம்மில் பலருக்குள் உள்ள கேள்வி. இதற்கான பதில், ‘ஆம்’ என்பதே என்கிறார்கள், நிபுணர்கள்.

நீங்கள் உங்களுடன் கொண்டு செல்லும் பொருட்களில் செல்போன்கள்தான் மிகவும் அசுத்தமானவை என்கிறார், கனடா டொரான்டோ பல்கலைக்கழக தொற்றுநோயியலாளர் கோலின் பர்னஸ்.

நீங்கள் வெளியே செல்லும்போது, கடைகளில் பல இடங் களைத் தொட வேண்டியுள்ளதால், கொரோனா வைரசை உங்கள் போனுக்கு கடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அப்படி வெளியே இருக்கும்போதே நீங்கள் யாருடனாவது போன் பேசுகிறீர்கள் என்றால், அப்போது போன் உங்கள் முகத்தைத் தொடுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க, முகத்தைத் தொடாமல் இருப்பதன் அவசியத்தை சுகாதாரத் துறையினர் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் மற்ற பல வைரஸ்களைப் போலவே செல்போன் போன்ற பொருட்களின் பரப்பில் பல மணி நேரம் வரை உயிருடன் இருக்கக்கூடியது என்று கூறும் ஒன்டாரியோ தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கோலின் லீ, முகத்தில் எந்தப் பொருளும் படக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம் என்கிறார்.

கொரோனா வைரஸ், செல்போன் பரப்பில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்று தெரியாது எனத் தெரிவிக்கும் டொரான்டோ பொது மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஐசக் போகோ, 2 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் வரை இந்த வைரஸ் செல்போன் பரப்பில் உயிருடன் இருக்கலாம் என்கிறார்.

எனவே, அவ்வப்போது நம் கன்னத்தோடு இழைந்து உறவாடுகிற செல்போன்களை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வதே நல்லது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here