தொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்

0
1181

தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கவும் மற்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் முதலீடு (Investment) தேவைப்படும். தொழிலுக்கு தேவையான முதலீட்டை வங்கிகள் (Bank), முதலீட்டாளர்கள் (Investors), துணிகர முதலீட்டு நிறுவனங்கள் (Venture Capitalist), கடன் பத்திரங்கள் (Bond) மற்றும் பங்கு சந்தையின் (Share Market) மூலம் பெறலாம். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை பெரும்பாலும் வங்கிகளே பூர்த்திசெய்கின்றன.

வங்கிகள் வருமானம் வரக் கூடிய தொழில்களுக்கும் மற்றும் திறமையான, தொழிலின் மீது பற்றாத காதல் உள்ள தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே கடன்களை பெரும்பாலும் வழங்குகின்றன. தொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடனை பெற தொழில் திட்ட அறிக்கையை (Project Report) சமர்பிக்க வேண்டும். தொழில்முனைவோர்களின் சிறந்த திட்ட அறிக்கைகள் தான் கடனை பெறுவதற்கு உதவுகின்றன. தொழில் திட்ட அறிக்கைகள் தான் நமது தொழில் வெற்றி பெற போவதை எடுத்து கூறும். அந்த தொழில் திட்ட அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண்டும். திட்ட அறிக்கையை சிறந்த முறையில் தயார்செய்வதும், நன்றாக சமர்பிப்பதும் தான் தொழில் முனைவோர்களுக்கான கடனை உறுதிச் செய்யும்

தொழில் மாதிரி (Business Financial Model)

முதலீட்டை பெறுவதற்கு தொழில்முனைவோர்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி தொழில் மாதிரியை (Business Financial Model) உருவாக்குவது. வங்கிகள் தொழில் முனைவோருக்கு கடனை வழங்க நிறுவனத்தின் தொழில் மாதிரியை ஆராய்ச்சி செய்வார்கள்.

நிறுவனம் எந்த மாதிரியான பொருட்களை அல்லது சேவைகளை விற்கபோகிறது, தொழில் எவ்வாறு வருமானம் ஈட்டப்போகிறது, நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்கள் (Customers) யார் யார், வருமானத்தின் (revenue) அளவுகள் போன்ற தொழில் மாதிரியை திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும். நிறுவனத்தின் தொழில் மாதிரியை சிறந்த முறையில் தயார் செய்யும் போதுதான் வங்கிகளிடமிருந்து கடனை பெறமுடியும்.

தொலைநோக்கு திட்டம் (Forecasting)
வங்கிகள் தொழில்முனைவோர்களிடம் தொலைநோக்கு திட்டத்தை (Forecasting) எதிர்பார்ப்பார்கள். நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டமே அதன் வருங்கால வளர்ச்சியை வரையறுக்கும் வரையறுக்கும். தொழிலின் தொலைநோக்குத் திட்டத்தை கண்டிப்பாக திட்ட அறிக்கையில் குறிப்பிடவேண்டும்.

தேவைப்படும் கடனின் அளவு மற்றும் பயன்படுத்தும் விதம் (Required Investment and How them to Use)
நிறுவனத்திற்கு முதலீடு (Capital) எவ்வளவு தேவைபடுகிறது, அந்த முதலீட்டை எதற்கெல்லாம் மற்றும் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதில் தொழில்முனைவோர்கள் மிகத் தெளிவாகவும் இருக்கவேண்டும். அதை அவர்கள் சரியாகவும் திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

போட்டியாளர் பகுப்பாய்வு (Competitor Analysis)

தொழில்முனைவோர்கள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார் யார், எத்தனை போட்டியாளர்கள் உள்ளனர், அவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள். எந்த வகையில் நிறுவனத்திற்கு போட்டிகளை கொடுப்பார்கள் என்பது போன்ற போட்டியாளர் பகுப்பாய்வு (Competitor Analysis) செய்ய வேண்டும். போட்டியாளர்களை பற்றி திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

Market Sizing (மொத்த சந்தை மதிப்பு)
தொழில்முனைவோர்கள் ஈடுபடும் தொழில் துறையின் சந்தை மதிப்பு என்ன என்பதை அளவிட வேண்டும். தொழில் துறையின் சந்தை மதிப்பின் அடிப்படையில்தான் நிறுவனம் எந்த அளவிற்கு வளர வாய்ப்பு இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும். நிறுவனம் மொத்த சந்தை மதிப்பில் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதை நிறுவனம் ஈடுபட்டுள்ள துறையின் மொத்த சந்தை மதிப்பை தெரிந்துகொண்ட பிறகே அளவிட முடியும். மொத்த சந்தை மதிப்பை திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

தொழில்முனைவோர்களின் அனுபவங்கள் (Entrepreneur Experience)
தொழில்முனைவோர்கள் தங்களின் முன் அனுபவங்களையும், தொழிலில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தினையும் குறிப்பிட வேண்டும்.

தொழில் மதிப்பீடுகள் (Valuations)

நிறுவனம் எவ்வளவு வருமானம் (revenue) ஈட்டும், எவ்வளவு லாபத்தை (Profitability projections) ஈட்டும், நிறுவனம் எப்போது லாபத்தை ஈட்டும் மற்றும் கடனை எப்போது திரும்பி செலுத்துவது என்பது போன்ற மதிப்பீடுகளை திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here