நிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்

0
1024

ராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த எழுத்தாளர் , கல்வியாளர்,  ஊக்கமூட்டும் பேச்சாளர், நிதி சார்ந்த நிதி கல்வியறிவாளர், மற்றும் வானொலி ஆளுமை உள்ளவர். நிதி (financial) மற்றும் வணிக கல்வியறிவு (business education) வழங்கும் Rich Dad நிறுவனத்தின் நிறுவனர். ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) உலக அளவில் அதிகமான விற்பனையான நிதி மற்றும் முதலீடு தொடர்பான Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியர்.

ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15  விதிகள்

 • அனுபவங்கள் உங்களை மிகச் சிறந்தவராக்கும்.
 • உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்.
 • தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்.
 • தொடர்ந்து கற்றுக் கொண்டே இருங்கள். கற்றுக் கொள்வதை நிறுத்திவிடாதீர்கள்.
 • உங்கள் செலவுகளை (Spending) உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
 • எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்கும் திட்டங்களை தீட்டுங்கள்.
 • தெளிவான மற்றும் துல்லியமான நிதி இலக்குகளை (Financial Goals) கொண்டிருங்கள்.
 • பொறுப்புகளை ஏற்றுகொள்ளுங்கள்.
 • உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள்.
 • நீங்கள் வெற்றி அடையும் வரை ஒரே பாதையில் செலுங்கள். வெற்றியிலேயே உங்கள் எல்லா கவனத்தை (focus) செலுத்துங்கள்.
 • கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.
 • தோல்வியடைவதற்கும் (failure), இழப்பதற்கும் (losses) பயப்படாதீர்கள்.
 • நீங்கள் எதற்காக கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
 • நீங்கள் சேமிப்பதை விட  முதலீடு செய்யுங்கள்.
 • எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள்.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here