$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்

0
1122

Practo மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம் முன் பதிவு செய்வதற்கும், மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் இலவச ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவும் இந்தியாவின் மிகப்பெரிய தளம் மற்றும் சுகாதார அப்ளிகேசன்  (platform & health app) ஆகும்.

Practo சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தனது சேவைகளை வழங்குகிறது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (doctors), 8000 மேற்பட்ட மருத்துவமனைகள் Practo வில் பதிவு செய்துள்ளனர். மாதத்திற்கு 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் Practo மூலம் மருத்துவர்களிடம் முன் பதிவு செய்கின்றனர்.

Practo நிறுவனம் சஷாங் (Shashank) என்பவரால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. $200 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் மதிப்பு இன்று $125 மில்லியன் டாலராக உள்ளது.

Tech in Asia’s Singapore மாநாட்டில் சஷாங் (Shashank) உரையாற்றினார்.  அப்போது அவரின் அனுபவத்திலிருந்து ஸ்டார்ட் அப் (startup) நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு  சில குறிப்புகளை கூறினார்.

பின்னடைவை ஊந்துதலாக  எடுத்துக்கொள்ளுங்கள்

நிறுவனம் தொடங்கிய காலத்தில் ஆரம்ப ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு விலகியது, முக்கியமான வாடிக்கையாளர்கள் வெளியேறியது, போதிய பணம் இல்லாமல் நிறுவனத்தை நடத்தியது போன்றவை அவருடைய பயணத்தில் அதிர்ச்சி நிறைய இருந்தது.

உங்கள் தோல்வியை பயன்படுத்தி உந்துதல் அடைவது கடினமாக இருக்கலாம், முயற்சி செய்யுங்கள்,  எல்லா இறக்கங்களையும் உங்களுக்கு உந்துதலாக்கி  மேலே உயருங்கள்.

நோக்கத்தை தெளிவாக வையுங்கள்

Practo தொடங்கிய நாள் முதல் அவரது நோக்கம் தெளிவாக இருந்தது என்று சஷாங் கூறினார்.அவர் ஒரு பெரிய தயாரிப்பை உருவாக்க வேண்டும், அது உலக சுகாதார துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்ததாக கூறினார்.

தீர்க்க வேண்டிய பிரச்சனையை காதலியுங்கள் ஆனால் ஐடியாவை அல்ல (love the problem, not the idea)

பிரச்சனையை காதலியுங்கள், அதற்கான  தீர்வுக்கான ஐடியாக்களை காதலிக்காதீர்கள். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் போது  கொண்டிருக்கும் ஐடியாக்கள் கொஞ்ச நாள் சென்ற பிறகு வேறு விதமாக மாறலாம். அதனால் ஐடியாக்களை காதலிக்காதீர்கள். உங்கள் நோக்கம் பிரச்சனைக்கான தீர்வுகளை கொடுப்பதே, அதற்கான ஐடியாக்கள் ஒரு ஒரு சமயத்தில் மாறலாம்.

நிறுவன நோக்கத்தை முதன்மையாக்குங்கள், இது ஊழியர்களிடம் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும்

நீங்கள் நிறுவன நோக்கத்தை மேம்படுத்தும் நடை முறைகளை செய்தால் , எது எனக்கு நல்லது, எது உங்களுக்கு நல்லது என்ற வாதங்களே எழாது. மாறாக நோக்கத்திற்கு எது நல்லது என்பதே பிரதானமாக அமையும்.

நிறுவன நோக்கத்தை முதன்மையாக கொண்டால் ஊழியர்களுக்குள் முரண்பாடுகள், சச்சரவுகள் (conflict), அரசியல் (politics) எழாமல் தவிர்க்கலாம்.

எப்போதும் ஒரு 30 வினாடி நிறுவனம் பற்றிய ஐடியாக்களை விளக்குவதற்கு (pitch)  தயாராக வைத்திருங்கள்

முதல் ஆயிரம் வாடிக்கையாளர்கள் (customers) பெறுவது கடினமாக இருக்கும். சந்தையில் (market) நிறுவனத்தின் பிராண்ட் (brand) மற்றும் மதிப்பு (reputation) நன்றாக இருக்கும் போது வாடிக்கையாளர்களை பெறுவது எளிதாகும்.

30 வினாடிகளுக்குள் நிறுவனத்தைப் பற்றி விளக்கி உங்கள் தயாரிப்புகளில் வாடிக்கையாளர்களிடம் ஆர்வத்தை உண்டாக்கவேண்டும்.

ஒரு சந்தையில் நன்றாக கால் பதித்ததிற்கு பிறகு புதிய சந்தையில் நுழையுங்கள்

Practo உலகளாவிய நிறுவனமாக குறிக்கோள் இருந்தது, ஆனால் இந்தியாவில் நன்றாக வளர்ந்த பிறகு வேறு நாடுகளுக்கு தனது சேவையை விரிவுபடுத்தியது.

முதலில் ஒரு சந்தையை கைபற்ற உங்கள் சக்தியை பயன்படுத்துங்கள், பிறகு புதிய சந்தையில் நுழையுங்கள்.

நிபுணத்துவம் எல்லா நேரங்களிலும் வெற்றியை ஏற்படுத்த உதவாது

சஷாங் (Shashank) ஒரு மருத்துவரிடம் நிறுவனத்தைப் பற்றி கூறியவுடன், அவர் உங்கள் ஐடியா வேலைக்கு உதவாது,  தொழில் செய்வதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினாராம்.

மருத்துவரால் அவர் துறை சார்ந்த வாய்ப்புகளை பற்றி யோசிக்க முடியவில்லை. நிபுணத்துவம் (expertise) சில நேரங்களில் உங்கள் சிந்தனையை (thinking) குறைத்து விடும்.

ஏதேனும் வாடிக்கையாளர் (customers) உங்கள் தொழில், ஐடியா வேலை செய்யாது என்று கூறினால், அது உங்களின் நம்பிக்கையை அழிக்கலாம். ஆனால் அவர்களால் நீங்கள் கொண்டுள்ள நிறுவனம் பற்றிய கற்பனையை (imagine) பார்க்க இயலாது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here