தொழில்முனைவோரை உயர்த்தும் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

0
1109

இளைய தொழில்முனைவோரை உயர்த்தும் வகையில் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ல் டெல்லில் வெளியிடுகிறார்.

டிசம்பர் 27,2015 மன் கி பாத் (‘Mann Ki Baat’) என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘Start-up India, Stand-up India’ முழு செயல்முறைத் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடப் போவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திரதின உரையில் ‘Start-up India, Stand-up India’ -வை பற்றி தெரிவித்திருந்தார்

‘Start-up India, Stand-up India’ திட்டம் இந்திய சுழலுக்கு தகுந்தாற்ப் போல் உருவாக்கப்படும் எனவும், சமுகத்தின் அடிநிலையில் உள்ள இளைஞர்கள் நன்மை அடையும் வகையில் திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். புதுமையான (innovative) தொழில்களுக்கு அதிகமாக உதவும் வகையில் ‘Start-up India, Stand-up India’ திட்டம் அமையும்

‘Start-up India, Stand-up India’ பிரச்சாரம் இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை துறையில் மற்றும் வேளாண்மைத் துறையில் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் என தெரிவித்தார். ‘Start-up India, Stand-up India’ திட்டம்  IITs, IIMs, Central universities & NITs போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.

இந்த திட்டத்தின் குறிக்கோளாக புதிய நிறுவன தொடக்கங்களுக்கு (start-up ventures) வங்கி நிதி உதவி அளிக்கும் வகையிலும்,  தொழில்முனைவுகளை (entrepreneurship) அதிகரிக்க சலுகைகள் (incentives) வழக்கும் விதமாகவும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அமையும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here