முதன் முதலில்..!!

0
1047

👉 இந்தியாவின் முதல் கணித நூல் கணிதசங்கிரஹா.

👉 வாகனங்களில் முதன் முதலில் நம்பர் பிளேட் அறிமுகப்படுத்தியது பிரான்ஸ் நாட்டில்தான்.

👉 இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் கான்பூர் ரயில் நிலையம் ஆகும்.

👉 கபடி ஆட்டம் 1990ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

👉 இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.

👉 தடுப்பூசி முறையை முதலில் அறிமுகம் செய்தவர் எட்வர்ட் ஜென்னர்.

👉 இந்தியாவின் முதல் மிதக்கும் தபால் நிலையம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தால் ஏரியில் ஆகஸ்டு 2011ல் திறக்கப்பட்டது.

👉 முதன் முதலில் நிலவில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

👉 முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர்.

👉 முதன் முதலில் தென்னாப்பிரிக்கா நாட்டில்தான் வெள்ளை சிங்கங்கள் இருந்தது.

👉 அசோக் சக்ரா விருது பெற்ற முதல் பெண் நீரஜா பனோட்.

👉 இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானேக்சா.

👉 நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்.

👉 முதல் மக்களவை சபாநாயகர் கணேஷ் வாசுதேவ் மவ்லங்கர் ஆவார்.

👉 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி டில்லியில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here