கே.எப்.சியில் வேலை தவறவிட்டு, 600 கோடி டாலர் நிறுவனத்திற்கு அதிபதியான ஜாக் மா

0
1323

இந்த காலத்துல பல இளைஞர்கள் தங்களோட லட்சிய நாயகனா, தொழில் முனைவுக்கு முன்னுதாரணமா திரு. ஜாக் மாவ உருவகப்படுத்தி இருக்காங்க. அலிபாபா நீங்க கேள்விபட்டுருப்பீங்க. சீனால இருக்கற மிகப்பெரிய மின் வணிக நிறுவனம் (இ-காமர்ஸ் சைட்) அதோட நிறுவனர் நம்ம ஜாக் மா. சீனால மின் வணிகம்னா இருந்த கருத்த ஒட்டுமொத்தமா மாத்தி அமைச்சுது ஜாக் மாவோட அலிபாபா.

மக்களோட வாங்கும் பழக்கத்த மொத்தமா தங்களுக்கு ஏத்தவாறு பயன்படுத்திக்கிச்சு அலிபாபா. அவுங்க ராஜாங்கம் மற்ற நாடுகள்ளையும் கிளை பரப்ப ஆரம்பிச்சுது. இன்றைய நிலைல அலிபாபா பங்குச்சந்தைகள்ல உலகத்தோட மிகப்பெரிய ஐபீஓவா இருந்துச்சு. அப்போ அதோட நிறுவனர் எந்த அளவுக்கு அதன் மூலமா சம்பாதிச்சுருப்பார்னு யோசிச்சு பாருங்க. உலகத்தோட முன்னணி பணக்காரர்கள் பட்டியல்ல அவரோட பேர பல படிகள் மேல ஏத்திச்சு.

பணக்காரர்கள் மட்டும்தான் பணம் சம்பாதிக்க முடியும்னு நெனைக்கற ஒவ்வொருத்தரும் படிக்கவேண்டிய கதை ஜாக் மாவோட வாழ்க்கை சரித்திரம். எதுவுமே இல்லாத நிலைல இருந்து, இன்னைக்கு எதுதான் இல்லைன்ற நிலைக்கு ஜாக் மா வந்துருக்காரு. எதுவுமே இல்லாத நிலைல அலிபாபாவ உருவாக்கி, அதன் மூலமா இன்னைக்கு உலகத்துல பல பேர்த்துக்கு உத்வேகத்த குடுத்துருக்காரு.

இந்த வெற்றிக்கு முன்னாடி பல நிராகரிப்புகள் அவரோட வாழ்க்கைல இருந்துச்சு. ஆனா இன்னைக்கு சீனாவோட தொழில் துறை மட்டுமில்லாம உலகத்துல தொழில் செய்யற ஒவ்வொருத்தருக்கும் தெரிஞ்ச ஒரு பேரா அலிபாபாவ உருவாக்கி இருக்காரு ஜாக் மா. அவரோட வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரின்னு பாப்போம் வாங்க…

தொடர் கஷ்டங்கள்! தொடர் கஷ்டங்கள்!

1964வது வருஷம் செப்டம்பர் 10ஆம் தேதி ஜாக் மா ஹாங்சௌ நகரத்துல பிறந்தாரு. மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்துல இவரு இரண்டாவது சுட்டி. இவருக்கு முன்னாடி ஒரு அண்ணன், பின்னாடி ஒரு தங்கை அந்த வீட்டுல இருந்தாங்க. எல்லா கதைகள்லயும் வரது மாதிரி இவங்க குடும்பம் கொஞ்சம் ஏழ்மையான குடும்பம். சிக்கலான ஒரு சூழல்ல தான் ஜாக் மா வளந்தாரு. அலிபாபா வரைக்கும் அவரோட பயணத்த எடுத்துப்பாத்தா, பல நிராகரிப்புகள் இருக்கு. ஒரு சாதாரண தொழில் முனைவோன் எவளோ சிரமத்துக்கு உள்ளாவனோ அவளோ தூரம் கஷ்டப்பட்டுருக்காரு. தோல்விகள் அவரோட ஆசிரியரா இருந்து அவருக்கு பல விஷயங்கள கத்து குடுத்துருக்கு.

தோல்விக்கு சொந்தக்காரர்!

ரொம்ப சீக்கரமாவே தோல்விகள் அவரோட வாழ்க்கைல துவங்கிருச்சு. சிறிய வகுப்புகள்ல 2 முறை, கொஞ்சம் மத்திய வகுப்புகள்ல 3 முறைனு உக்காந்து உக்காந்து தான் பள்ளியவே முடிச்சுருக்காரு ஜாக் மா. கல்லூரி நுழைவுத் தேர்வுல கூட 2 தரம் தோல்வி. சரி கல்லூரி படிப்பாவது சிறப்பா இருக்குமான்னு பாத்தா அதுவும் ரொம்ப சாதாரண மதிப்பெண்கள் தான் கொடுத்துச்சு. படிச்சு முடிச்சு இவரு விண்ணப்பிச்ச 50 வேலைகள் இவரை நிராகரிச்சுருக்கு

 

கல்வியோடு சக்திய ஜாக் மா உணர்ந்திருந்தாரு :

ஒருத்தரோட வாழ்க்கைல கல்வி எவளோ முக்கியம்னு ஜாக் மா உணர்ந்ததால படிப்பு மேல அவருக்கு ஆர்வம் குறையல. ஆங்கில மொழி மேல அவருக்கு இருந்த ஆர்வம் அவர ஹாங் சௌ ஆசிரியர் மையத்துக்கு விண்ணப்பிக்க வெச்சுது. 1988வது வருஷம் இளங்கலை பட்டத்தோட ஜாக் மா படிச்சு முடிச்சு வெளில வந்தாரு. ஒரு ஆங்கில ஆசிரியரா பல காலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள ஜாக் மா உருவாக்கி இருக்காரு. ஆங்கிலம், சர்வதேச வணிகம் இந்த ரெண்டு பாடங்களையும் ஹாங்சௌ டியான்சி பல்கலைக்கழகத்துல சொல்லிக்குடுத்தாரு ஜாக் மா.

அனுபவம்!

அவரோட நிறுவனத்த உருவாக்கிட்டு இருந்த சமயத்துல 2006ல சியாங் காங் பல்கலைக்கழகத்துல மேலாண்மை பட்டம் படிச்சு வாங்குனாரு (எம்பீஏ). ஒவ்வொரு விஷயத்தையும், தன்னோட வாழ்க்கைல வந்த அனுபவம் மூலமா தோல்விகள் மூலமா கத்துக்கிட்டு அதுல இருந்து முன்னேறினாரு ஜாக் மா. சீனாக்கு வர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஊர் சுத்தி காட்டி, அவுங்க கூட பேசி பேசி, தன்னோட ஆங்கில அறிவ வளத்துக்கிட்டாரு ஜாக் மா. அது மட்டும் இல்லாம, அந்த சுற்றுலா பயணிகளுக்கு கடிதம் எழுதவும் செஞ்சாரு. அதனால அவரோட ஆங்கில அறிவு இன்னும் அதிகமாச்சு.

ஹார்வார்ட் பல்கலை படிக்க அனுமதிக்கல ஆனா கற்பிக்க அழைக்கும் :

நேர்காணல்கள்ல பல முறை ஜாக் மா தன்னோட வேலை தேடும் படலத்த பத்தியும், அதுக்கு முன்னாடி படிக்க முயற்சி செஞ்ச படலங்கள் பத்தியும் சொல்லி இருக்காரு. காவல் துறைல பணி புரிய விண்ணப்பிச்ச 5 பேர்ல ஜாக் மாக்கு மட்டும் வேல கிடைக்கல. இன்னொரு நேர்காணல்ல கேஎப்சீல மேலாளரா பணிபுரிய விண்ணப்பிச்ச 24 பேர்ல இவருக்கு மட்டும் வேலை கிடைக்கலன்னு சொல்லி இருக்காரு. 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிச்சும் அவருக்கு தோல்வி தான் மிச்சம். அலிபாபா நிறுவனத்த துவக்கரத்துக்கு கூட பல முறை முதலீட்டாளர்கள் இவரை நிராகரிச்சாங்க. காரணம் இந்த முறைல லாபம் பாக்க முடியாதுன்னு சொன்னாங்க

ஜாக் மாவின் முதல் நிறுவனம் : ஜாக் மாவின் முதல் நிறுவனம் :

அலிபாபாவுக்கான விதை 1994ல இணையம் பத்தி ஜாக் மா கேள்விப்பட்டபோ விழுந்துச்சு. அத பத்தி இன்னும் அதிகமா கத்துக்க 1995ல தன்னோட அமெரிக்கா நண்பர்கள் உதவியோட அமெரிக்கா போய் கத்துக்கிட்டாரு. முதல் முதலா கூகிள் தேடு பொறி கிட்ட அவர் கேட்ட கேள்வி, சீனால கிடைக்கற பீர் பத்தினது. ஆனா அதுக்கு பதில் இல்ல. அடுத்து சீனாவ பத்தி எந்த கேள்விக்கும் பதில் இல்ல. இதன் மூலமா சீனால இருக்கற வாய்ப்புகள் பத்தி உணர ஆரம்பிச்சாரு ஜாக் மா. இதன் மூலமா தன்னோட நண்பனோட இணைந்து, ஓரு வலைதளத்த உருவாக்குனாரு. இது சீனர்கள் மத்தியில பரபலமாச்சு. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்த நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கி குடுக்கற ஒரு நிறுவனமா மாத்துனாரு.

முதல் மூன்று வருடத்தில்…

முதல் மூணு வருஷத்துக்குள்ள அவரோட நிறுவனம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுது. அடுத்ததா ஜாக் மா ஒரு ஐடீ நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியா பொறுப்பு ஏத்துக்கிட்டாரு. அந்த நிறுவனத்த சீனாவோட சர்வதேச மின்னணு வர்த்தக மையம் நிறுவியிருந்தாங்க. அது அரசோட அயல்நாட்டு வணிகம் மற்றும் பொருளாதார துறை கட்டுப்பாட்டுல இருந்தது. இந்த நேரத்துல தான் அலிபாபா அவரோட மனசில உதிச்சது.

நண்பர்களுடன் உதயம்!

அதனால 1999ல அந்த நிறுவனத்துல இருந்து வேலைய ராஜினாமா செய்தாரு ஜாக் மா. தன்னோட சொந்த ஊரான ஹாங் சௌக்கு வந்து 17 நண்பர்களோட சேர்ந்து அலிபாபாவ துவக்குனாரு. முதல்ல அலிபாபா சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கிற சவால்கள எப்பிடி தீர்த்து வெக்கறதுன்னு முயற்சி செஞ்சது. அதோட நிக்காம மின் வர்த்தகத்துல உலகம் முழுசும் என்ன என்ன சவால்கள் இருக்கோ, அத தீர்த்து வெக்கணும்னு ஜாக் மா கனவு கண்டாரு. அலிபாபாவின் வெற்றி: அலிபாபா சீனாவின் பல ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களோடு தொடர்பு கொள்ள உதவியது. அதன் மூலம் அவர்கள் தொழில் வளர உதவியது. அவர்கள் தொழில் வளர வளர அலிபாபாவும் மிகப்பெரிதாக வளர்ந்தது. “சாப்ட் பேங்க்” மற்றும் “கோல்ட்மேன் சாக்ஸ்” இரண்டும் அலிபாபாவில் முதலீடு செய்து அதனை மேலும் பெரிதாக்கினர். அலிபாபா ஒரு திடமான நிலைக்கு வந்த பின்பு, 2003ஆம் ஆண்டு ஜாக் மா டோபியோவை அறிமுகப்படுத்தினார். இரண்டே ஆண்டுகளில்… துவக்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சந்தையில் மிகப்பெரிய இடத்தை டோபியோ பிடித்தது. தற்போது அலிபாபா 9 கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. அரசு கோலோச்சி வந்த துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்தாக சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. தற்போது சீனாவில் பல தயாரிப்பு நிறுவங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. ஒரு வெற்றிக்கதைக்கு தோல்விகளே முதற்படி : அலிபாபா மற்றும் ஜாக் மா : தொழில் முனையும் பலரின் கனவுகளில் இந்த இரண்டு வார்த்தைகளும் இறவா வண்ணம் நிலைத்து நிற்கும். அடுத்த சந்ததியினருக்கு புதியதொரு வழி காட்டியுள்ளது அலிபாபா. ஜாக் மா வாழ்வில் இருந்து பலவற்றை நாம் கற்க இயலும். ஒரு நிறுவனத்தை துவங்க, ஒருவர் பணக்காரராகவோ , முன் அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் இல்லை. தேவையான ஒன்றாக தொலை நோக்குப்பார்வையும் வாய்ப்புகளை கண்டறியும் திறமையும் கூறலாம். பாடம் மற்றுமொரு பாடம் நாம் ஜாக் மாவின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டியது, தோல்விகளை எவ்வாறு வெற்றிக்கு படிகளாக மாற்றுவது என்பதை. ஒவ்வொரு தோல்விக்கும் ஜாக் மா துவண்டிருந்தால் இன்று நாம் அலிபாபாவை பார்த்திருக்க இயலாது. More SUCCESS STORY News  கடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி! அர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை! உலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்! யாரும் அறியாத சானியா மிர்சாவின் வாழ்க்கை பக்கங்கள்! ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா? வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி! கடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி! அர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை! உலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்! யாரும் அறியாத சானியா மிர்சாவின் வாழ்க்கை பக்கங்கள்! ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா? வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி! கடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி! அர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை! PrevNext உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் ALLOW NOTIFICATIONS

அலிபாபாவின் வெற்றி: அலிபாபாவின் வெற்றி:

அலிபாபா சீனாவின் பல ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களோடு தொடர்பு கொள்ள உதவியது. அதன் மூலம் அவர்கள் தொழில் வளர உதவியது. அவர்கள் தொழில் வளர வளர அலிபாபாவும் மிகப்பெரிதாக வளர்ந்தது. “சாப்ட் பேங்க்” மற்றும் “கோல்ட்மேன் சாக்ஸ்” இரண்டும் அலிபாபாவில் முதலீடு செய்து அதனை மேலும் பெரிதாக்கினர். அலிபாபா ஒரு திடமான நிலைக்கு வந்த பின்பு, 2003ஆம் ஆண்டு ஜாக் மா டோபியோவை அறிமுகப்படுத்தினார்.

இரண்டே ஆண்டுகளில்... இரண்டே ஆண்டுகளில்…

துவக்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சந்தையில் மிகப்பெரிய இடத்தை டோபியோ பிடித்தது. தற்போது அலிபாபா 9 கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. அரசு கோலோச்சி வந்த துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்தாக சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. தற்போது சீனாவில் பல தயாரிப்பு நிறுவங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது.
ஒரு வெற்றிக்கதைக்கு தோல்விகளே முதற்படி : ஒரு வெற்றிக்கதைக்கு தோல்விகளே முதற்படி :

அலிபாபா மற்றும் ஜாக் மா : தொழில் முனையும் பலரின் கனவுகளில் இந்த இரண்டு வார்த்தைகளும் இறவா வண்ணம் நிலைத்து நிற்கும். அடுத்த சந்ததியினருக்கு புதியதொரு வழி காட்டியுள்ளது அலிபாபா. ஜாக் மா வாழ்வில் இருந்து பலவற்றை நாம் கற்க இயலும். ஒரு நிறுவனத்தை துவங்க, ஒருவர் பணக்காரராகவோ , முன் அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் இல்லை. தேவையான ஒன்றாக தொலை நோக்குப்பார்வையும் வாய்ப்புகளை கண்டறியும் திறமையும் கூறலாம்.

 

பாடம்

மற்றுமொரு பாடம் நாம் ஜாக் மாவின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டியது, தோல்விகளை எவ்வாறு வெற்றிக்கு படிகளாக மாற்றுவது என்பதை. ஒவ்வொரு தோல்விக்கும் ஜாக் மா துவண்டிருந்தால் இன்று நாம் அலிபாபாவை பார்த்திருக்க இயலாது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here