தொழில்முனைவோர் பெற்றிருக்கவேண்டிய சீரிய பண்புகள் – Qualities that Entrepreneurs should Possess

0
193

தன்னம்பிக்கை

தன் மீதும் தனது திறமை மீதும் பூரண நம்பிக்கை வைத்தல்,
ஒரு காரியத்தையோ, சவாலையோ வெற்றிகரமாக முடிக்க சந்திக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வைத்தல்,
எதிர்ப்பு இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருத்தல்,
மற்றவர்கள் செய்யத் தயங்கும் ரிஸ்க்கான செயலை செய்தல்.
புதிய சிந்தனை, சுய செயல்பாடு
காரியத்தை முடிக்க சாதாரணமாக தேவைப்படுவதை விட கூடுதல் முயற்சி எடுத்தல்,
பிறராலோ அல்லது சூழ்நிலையாலோ உந்தப்படுவதற்கு முன்பே காரியத்தில் இறங்குதல்,
தொழிலை புதிய இடங்களில் புதிய பொருள்கள்-புதிய சேவை மூலமாக விரிவாக்க செயல்படுவது.
தகவல் சேகரித்தல்
இலக்கை அடைய தேவையான தகவல்களை சுயமாக சேகரிக்க முற்படுவது.
சுயமாக சந்தை ஆய்வு செய்தோ, வல்லுநர்களை கலந்தாலோசித்தோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தொழிலுக்கு பயனுள்ள தகவல்களை முயன்று சேகரித்தல்.
வாய்ப்புகளை உருவாக்குதல்- பயன்படுத்துதல்
வாய்ப்புகளுக்காக சூழ்நிலையை கவனித்தல், கண்டறிதல் உடனடியாக அதை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்தல்,
அசாதாரணமான வாய்ப்புகளையும் உருவாக்கி தொழிலுக்குத் தேவையானவற்றை அடைதல்.
முறையான திட்டமிடல்
இலக்கை அடைய சரியான படிப்படியான திட்டமிடல்
பெரிய செயலை சிறிய சிறிய செயல்களாக மாற்றி எளிதில் முடிக்கும் திறமை.
தடைகளை முன்னறிந்து திட்டமிடல்,
சீரான மற்றும் முறையான செயல் ஆற்றல்
விடா முயற்சி
தடைகளை தாண்டி இலக்கை அடைய திரும்பத் திரும்ப செயல்படுதல்,
பெரிய தடை வரும்போதும் மனம் சோராது செயல்படுதல்,
புதிய செயல்கள் மூலம் தடைகளை உடைத்தல்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here