வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ?

0
1098

ஒரு சில மாதங்களுக்கு முன்னெல்லாம் துணி கடைகள், நகை கடைகள், மிகப்பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் போன்ற பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டி கிரிடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கொடுக்கும்போது, அதனை அவர்கள் payment terminal என்னும் சாதனத்தில் பக்கவாட்டில் ஸ்பைப் செய்து பணம் பரிமாற்றம் செய்து கொள்ளவர்கள்.

ஆனால் இன்றோ கார்டுகளை ஸ்பைப் செய்வதற்கு மாறாக, payment terminal சாதனத்தின் முகப்பில் உள்ள ஒரு ஸ்லாட்டில் உள்ளே நுழைக்கின்றனர் அதுவும் சில வினாடிகளில் கார்டு பிராசஸ் செய்யப்பட்டு தேவையான பணம் நமது வங்கி கணக்கில் இருந்து, அவர்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இப்போது payment terminal சாதனத்தில் டெபிட் கார்ட் மற்றும் கிரிடிட் கார்ட் இன்சட் செய்வதற்கு என்ன காரணம் என்றால் கார்டில் பொருத்தப்பட்டுள்ள EMV chip தொழில்நுட்பம் (emv technology) தான் இதற்கு காரணம் ஆகும்.

சரி EMV chip தொழில்நுட்பம் (emv technology) என்றால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

EMV chip தொழில்நுட்பம்(emv technology):

SBI உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு emv chip card பொருத்தப்பட்ட புதிய ATM கார்டுகளை அறிமுகம் செய்து வருகின்றனர். EMV chip தொழில்நுட்பம் என்பது  E-rupay, Master மற்றும் Visa ஆகிய வங்கி அட்டை உற்பத்தி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

எனவேதான் இந்த நிறுவன பெயர்களில் முதல் எழுத்துக்களை கொண்டு EMV chip தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும் – உசார்..!

EMV chip சிறப்பு அம்சம்:

EMV அட்டைகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு, மேம்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கும் மைக்ரோ பிராசஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

இது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமாகும்.

EMV தொழில்நுட்பம் (emv technology) இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு புதிது என்றாலும், கடந்த 2000 ஆண்டின் முற்பகுதியிலேயே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் இந்த EMV தொழில்நுட்பமானது கடந்த 1970-ம் ஆண்டுகளில் இருந்து செயல்படுத்தப்பட்டு தற்போது வரை பயன்படுத்தி வரும் MAGNETIZED REGION என்ற கார்டுகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது.

MAGNETIZED REGION CARD பல நாடுகளில் பயன்படுத்தி வந்ததாலும் அந்த கார்டுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கார்ட் ஹோல்டர்களை எப்படி திருடலாம் என்பதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனர் திருடர்கள்.

இதன் காரணமாக போலியான கார்டுகளை தயார் செய்து பணமோசடியில் ஈடுபடுகின்றனர்..

ஆனால் EMV கார்டுகளில் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் பரிவர்த்தனையில் மேற்பட்ட பாதுகாப்பை வழங்குவதோடு, கிரிடிட் கார்டு குற்றங்களையும் குறைக்கின்றது.

சரி MAGNETIZED REGION CARD விட EMV CHIP எந்தவகையில் பாதுகாப்பானது என்றால், MAGNETIZED REGION CARD-யில் அந்த வங்கிக்கணக்கை பற்றிய முழு விவரங்களையும் MAGNETIZED டைப்பில் மாறாத வடிவில் பாதிக்கப்பட்டிருக்கும்.

எனவே இந்த வசதியை பயன்படுத்தி கொண்டு திருடர்கள் இந்த வங்கி கணக்கின் முழு விவரங்களையும் பிரதியெடுத்து போலியாக தயார் செய்திருக்கும் மற்றொரு கார்டில் MAGNETIZED டைப் அட்டைகளில் எளிதாக பதிந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் EMV CHIP(புதிய atm அட்டை) பொருத்தப்பட்ட இந்த கார்டில் அவ்வாறெல்லாம் செய்துவிட முடியாது.

ஒரு பரிவர்த்தனையின் போது அட்டை அசல் தன்மையை, அட்டை வழங்குனரால் dynamic diagram தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவோ அல்லது payment terminal சாதனத்தின் ஆஃப்லைன் டேட்டா மூலம் பரிசோதனை செய்த பிறகே பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

எனவே EVM சிப் கார்டுகளை(புதிய atm அட்டை) போலியாக பயன்படுத்திடுவது என்பது இயலாத காரியமாகும்.

அதே போல் ஒவ்வொரு பரிவார்த்தையின் போதும் இந்த கார்டில் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோ ப்ராசஸ் சிப் மீண்டும் பயன்படுத்த முடியாத ஒரு தனித்தன்மையான பரிவர்த்தனையை தரவுகளை உருவாக்குகின்றது.

இதனால் திருடர்கள் ஓர் இடத்தில் நடைபெற்ற பரிவர்த்தனை தரவுகளை திருடி அடுத்தடுத்த பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட முடியாது.

மேலும் பரிவர்த்தனை செய்யும் ஒருவர், அட்டையின் உரிமையாளர்தான என்று ஆன்லைன் பின் அல்லது ஆஃப்லைன் பின் அல்லது சிக்கினிசர் வெரிஃபிகேஷன் செய்து அங்கீகரிக்கப்பட்ட பின்பு தான்(புதிய atm அட்டை) அந்த பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது.

இதனால் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட அட்டைகள் பிறரால் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here