சோம்பேறித்தனத்தை ஓரம்கட்டி வெற்றிக்கான பாதையில் பயணிப்பது எப்படி?

0
1153

🖌️ நாளை, அடுத்த வாரம், ஒன்றாம் தேதி முதல் என தள்ளிப் போடுவது உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த நீங்கள் தயங்குவதற்கு நீங்களே உருவாக்கும் காரணங்கள்.

🖌️ காலையில் வேகமாக சீக்கிரமாக எழுந்து யோகா செய்ய வேண்டும். வாக்கிங் போக வேண்டும். ஜிம் செல்ல வேண்டும் என நினைத்து காலையில் எழுந்ததும் செல்ல வேண்டாம் என்பதற்கு காரணங்களை தேடுகிறீர்களா?
அந்த காரணத்தை புரிந்து கொண்டால் சோம்பேறித்தனத்தை வெல்லலாம்!

🖌️ உங்கள் மீதும் உங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைப்பது சோம்பேறித்தனத்தை ஒழிப்பதற்கான முதல்படி.

🖌️ உடலிலும் மனதிலும் ஆரோக்கியம் இல்லாது இருந்தால் சோம்பல் வரும். அதனால் ஆரோக்யத்தை பேணிக்காப்பது அவசியம்.

🖌️ வேலை செய்து கொண்டிருக்கும்போது பிரேக் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தைப் பார்ப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது பேஸ்புக் வாட்சாப் பார்ப்பது குற்றம் அல்ல. நீங்கள் பிரேக் எடுக்கும் நேரம் உழைக்கும் நேரத்தில் மூன்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.

🖌️ நான் செய்ய வேண்டிய வேலைக்கான காலத்தை கடந்து விட்டேன் என்ற குற்ற உணர்ச்சியும், முடிவும் உங்கள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முடக்கிவிடும். இனி செய்து பிரயோஜனம் இல்லை என்ற எண்ணத்தை ஒழித்து விடுங்கள்.

🖌️ நினைத்ததை முன்னெடுத்து ஒரு முறை தோல்வி அடைந்ததால் மீண்டும் முயற்சிப்பதற்கு அவமானப்பட்டு விடுவதால் வரும் தயக்கம் சோர்வடைய வைக்கும. தோல்வியை கண்டு தளர்ந்து விடக்கூடாது.

🖌️ உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறு மாற்றத்தையும் எழுதி வைத்து கொள்ளுங்கள். சிறு மாற்றம் கூட உங்கள் உத்வேகத்தை அதிகரிக்கும்.

🖌️ எடுத்துக்காட்டுக்கு உடல் எடைக் குறைப்பதற்கான முயற்சி ஒரே மாதத்தில் பலன் தர வேண்டும் என்பதில்லை. அதை காரணமாக வைத்து மீண்டும் பழைய சோம்பேறித்தனத்திற்கு சென்று விடாதீர்கள். உடற்பயிற்சி செய்ய எடுக்கும் சிறு முயற்சியே முக்கியமானது.

🖌️ தோல்வி என்பது அனைவருக்கும் வருவது தான். அதிலிருந்து அதை காரணம் காட்டி சோர்ந்து போய்விடாமல் மீண்டும் எழுந்து நின்று எடுத்த காரியத்தை தொடர்வதே வெற்றிக்கான பாதையாகும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here