வாழ்க்கை முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்து, தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர்

0
1168

வாழ்க்கை முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்து, தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர் கொலோனல் ஆர்லண்ட் சாண்டர்ஸ்.

👉என்றிவில்லே, இண்டியானா மாகாணத்தில் 1895ல் பிறந்த ஏழை சிறுவன். தனது ஆறாவது வயதில் தந்தையை இழந்தான். அவனது தாய் வேலைக்கு செல்வதால் வீட்டிலிருந்து இளம் சகோதரர்களை கவனிக்க வேண்டிய நிலை.

👉பத்தாவது வயதில் ஒரு தோட்ட வேலைக்கு சென்றான். சகோதரர்கள் பொழுது பள்ளிக்கூடத்திற்கு சென்றதும் தான் ஆறாம் வகுப்போடு நிறுத்திகொண்டு ஒரு பெயிண்டராக பணிபுரிந்தான்.

👉16வது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ஒரு வருடத்தில் வெளியேறி ரயில்வே துறையில் பணியாளராக சேர்ந்தார். அப்படியே அருகில் இருந்த ஒரு சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க சேர்ந்தார். ஆனால், அங்கு சண்டையிட்டதால் வெளியேற்றப்பட்டார்.

👉 லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அங்கு உள்ள சட்டங்களை மதிக்கவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டார். பின்னர் சொந்தமாக ஒரு படகு கம்பெனி ஆரம்பித்து அதில் கிடைத்த லாபத்தில் தொடங்கிய விளக்கு கம்பெனி நட்டமானது.

👉சொந்த தொழிலை விட்டு மீண்டும் ஒரு டயர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அந்த கம்பெனி மூடவே வேலையை இழந்தார்.

👉 நாற்பதாவது வயதில் சொந்தமாக ஒரு ஹோட்டலை ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த பிற வேறு ஒரு ஹோட்டல்காரருடன் நடந்த சண்டையில் ஹோட்டல் மூடப்பட்டது.

👉நான்கு வருடம் கழித்து மீண்டும் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்தார். ஆனால், அது தீ விபத்துக்குள்ளாகி மூடப்பட்டது.

👉விடா முயற்சியாக மீண்டும் 140 சீட் ஓட்டலை ஆரம்பித்தார். இரண்டாம் உலகமகாயுத்தம் ஆரம்பிக்கவே ஹோட்டல் மூடப்பட்டது.

👉பின்னர், சொந்த சிக்கன் ரெசிபிக்களை விற்க ஆரம்பித்தார். யாரும் வாங்க முன்வரவில்லை.

👉மீண்டும் சொந்தமாக நடத்திய ரெஸ்டாரன்ட் நட்டமாகி 105 டாலர் மட்டுமே அவரிடம் மிஞ்சியது.

👉70வது வயதில் ஐந்தாவது முறையாக ஆரம்பித்த ரெஸ்டாரன்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் அவரது ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டு வெற்றியானது.

👉தனது 90வது வயதில் அவர் இறப்பதற்கு முன்னால் 48 நாடுகளில் 6000 ரெஸ்டாரண்ட்களை ஆரம்பித்திருந்தார்.

ஒன்று இரண்டு அல்ல. தனது எழுபதாவது வயது வரை அனைத்திலுமே தோல்வி கண்ட *கொலோனல் சான்டர்ஸ்*, இன்று உலகம் முழுவதும் இருக்கும் சங்கிலி ரெஸ்டாரன்ட்கள் ஆரம்பிப்பதற்கு காரணமானவர்.

ஒரு தோல்வியை கண்டாலே பயந்து அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சுகிறோம். கடனும் தோல்வியும் விடாமல் விரட்டியும் அவற்றை எட்டி உதைத்து பொதுவாக ஓய்வு காலம் என சொல்லப்படும் எழுபதாவது வயதில் தனது சாம்ராஜ்யத்தை கட்டி உயர்த்தினார்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here